மண்முனை வடக்கு பிரதேச செயலக ‘மட்டு முயற்சியான்மை’ பிரதேச மட்ட கண்காட்சியும் விற்பனையும் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்து சிறப்பித்திருந்தார். நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து விற்பனைக் கண்காட்சி கூடம் அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்த உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களைப் பார்வையிட்ட அரசாங்க அதிபர் உற்பத்தியாளர்களின் முயற்சியை பாராட்டியதுடன் அவர்களுக்கு அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கக் கூடிய உதவிகளை பெற்றுக்கொடுக்குமாறு உரிய திணைக்களங்களின் அதிகாரிகளை பணித்திருந்தார்.

இக்காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை குறைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில் கைத்தறி உற்பத்திகள் கைப்பணிப்பொருட்கள்இ விவசாய உற்பத்திகள், சேதனைப் பசளை உற்பத்திகள் மற்றும் உணவு உற்பத்திப் பொருட்கள் அடங்கலாக பெருமளவான உற்பத்திப் பொருட்களின் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர்கள்,கணக்காளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள,சுயதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், கிராமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் முயற்சியாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவும் இணைந்து வருடாந்தம் ‘மட்டு முயற்சியான்மை’ கண்காட்சி விற்பனையை நடாத்தி வருகின்றமை குறிப்பிடதத்க்கது.

Exhibition

News & Events

23
මැයි2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
මැයි2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

Scroll To Top