சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 20 ஆவது ஆண்டு நினைவு தினமாகிய 26.12.2024 அன்று இயற்கைப் பேரழிவில் உயிர் நீத்த சகலரையும் நினைவு கூர்ந்து மௌன அஞ்சலியுடன் மக்களின் தேசிய பாதுகாப்பு மற்றும் முன்னாயத்தம் என்பன குறித்து மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.


நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்கள்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள், கணக்காளர், பதிவாளர், சமுர்த்தி வங்கி பிரதான முகாமையாளர்கள், அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர், சமூகசேவை உத்தியோகத்தர்,கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட செயலக அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.













