பலநோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கான இரு வார கால ஆரம்ப பயிற்சி நெறியானது இன்று(16.11.2020) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சுகாதார வழிமுறை பின்பற்றலுடன் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் மண்முனை வடக்கு மற்றும் மண்முனை மேற்கு பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பயிலுனர்கள் கலந்து கொண்டனர்.
















