இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம், மண்முனை வடக்கு பிரதேச செயலகம், அறநெறி பாடசாலைகள் மற்றும் ஆலயங்கள் இணைந்து நடாத்திய தைப்பொங்கல் உழவர் விழா 27.01.2023 அன்று மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் மண் முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். சிறீதரன் கலந்துகொண்டார்.
பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் வகையில் அறநெறி பாடசாலை மாணவர்களின் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சியாஹுல் ஹக், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான அ.சுதர்சன் மற்றும் ச.பிரணவசோதி, மேலதிக மாவட்ட பதிவாளர் எஸ். சுசிகரன், நிர்வாக உத்தியோகத்தர் கிராம சேவை கே.ராஜன் ஸ்ரீ மாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கர்மார்கள், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள்,அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.














