சர்வதேச மகளிர் தினத்தையொட்டி "அவளது பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் 14.03.2024 அன்று காந்தி பூங்கா வளாகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.



இந்நிகழ்வின் ஆரம்ப கட்டமாக விழிப்புணர்வு நடைபவனி பிரதேச செயலகத்திலிருந்து காந்தி பூங்கா வரை இடம்பெற்றது.இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நா.தனஞ்சயன் கலந்து கொண்டனர்.



இதில் சிறந்த மகளிர் சங்கம், சிறந்த மாதர் அபிவிருத்தி சங்கங்கள் கௌரவிக்கப்பட்டதுடன் சிறந்த பெண் சுயதொழில் முயற்சியாளராக கோகிலாதேவி ரஞ்சித்குமார் என்பவருக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.


மேலும் மகளிர் தின சிறப்பு பேச்சு, நடனம், நாடகம், கவிதை மற்றும் பாடல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.இதில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், சமுர்த்தி தலைமை முகாமையாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.












