வருடாந்த பொங்கல் விழாவானது 27 ஜனவரி 2020 மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு .வ. வாசுதேவன் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.


மேலும் இந்நிகழ்வினை பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பாரம்பரிய முறையில் சிறப்பித்தனர்.





அதனைத்தொடர்ந்து மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாச்சார கூடமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், வேறு பிரதேச செயலகங்களின் செயலாளர்கள் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக செயலாளர்,உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம் பெரும் தொன்மையினை பிரதிபலிக்கின்ற பொருட்கள் மற்றும் கலை கலாச்சாரத்துடன் தொடர்பான பொருட்கள் இக் காட்சிக் கூடத்தில் காணப்படுகின்றது.












