மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட Kallady Zone இற்குரிய 13 கிராம சேவகர் பிரிவுகளில் 08.09.2022 ஆம் திகதி காலை 7.30 முதல் மதியம் 12.30 வரை சிரமதானம் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது பிரதேச செயலாளரின் தலைமை மற்றும் வழிகாட்டுதலுடன் உதவி பிரதேச செயலாளரின் நேரடி கண்காணிப்புடன் SDO, EDO, கிராம உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.
மேலும் இந்த சிரமதான நிகழ்வின் போது தற்போது பாவனையில் இல்லாத அரச கட்டிடங்கள், காணி, பாடசாலை ஆகிய இடங்களில் காணப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டதுடன் அலுவலகங்களில் காணப்பட்ட நீர், மலசல கூடம், மின்சாரம், வேலி மற்றும் உட்புற சூழலுக்கான் குறைபாடுகள் இனம் காணப்பட்டு உரிய முறையில் தீர்க்கப்பட்டதுடன் சுற்றுப்புறச்சூழலில் பூமரங்கள் மற்றும் பயன்தரும் மரங்களும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
s1
 
s2
 
s3
 
s4
 
s5

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .வாசுதேவன் தலைமையில் கல்லடி திருச்செந்தூர் ,கல்லடி வேலூர் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் நெல் மூடைகள் வழங்கப்பட்டது. குறித்த கிராமங்களில் செயல்படுகின்ற கிராம மாதர் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு முதல் கட்டமாக ஒரு குடும்பத்திற்கு ஒரு மூடை நெல் வீதம் வழங்கப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபர் கே .கருணாகரன் தலைமையிலான மாவட்ட அரச அதிகாரிகளுடனான இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய கிராம அபிவிருத்தி சங்கத்தின் நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட நெல் இலகு கடன் அடிப்படையில் வழங்கப்பட்டதுபிரதேச செயலாளர் வி. வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை வடக்கு கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஜிஎன் . ராஜன் ,முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் டி .மேகராஜ் , கல்லடிவேலூர் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் டி .மயூரன் , மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கிராம மாதர் சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Capture 68 696x3321

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு 06.09.2022 பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

மண்முனை வடக்கு பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்களுக்கான உளநல மேம்பாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவினால் PPCC நிறுவனத்தின் அனுசரணையுடன் 07.09.2022 நடாத்தப்பட்டது.

1

2

3

4

5

6

7

மட்டக்களப்பு மாவட்ட 14 பிரதேச செயலக பிரிவுகளிற்கு இடையில் நடாத்தப்பட்ட குழுநிலை மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் 66 தங்க பதக்கங்களை பெற்று Manmunai North Division மாவட்ட மட்ட Champion ஆக தெரிவு செய்யப்பட்டது.

மேலும் 47 வெள்ளி, 37 வெண்கல பதக்கங்களையும் பெற்றுள்ளது.

பெண்களுக்கு இடையான மெய்வல்லுனர் போட்டியில் சுவடு மற்றும் மைதான போட்டியில் சிறந்த பெண் மெய்வல்லுனர் வீராங்கனையாக Miss. H.E Outscorne 100,200, நீளம் பாய்தல் போட்டிகளில் 3 Gold Medals பெற்று தெரிவு செய்யப்பட்டார்.

1

2

3

4

5

6

7

8

9

10

News & Events

23
May2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
May2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

Scroll To Top