மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி 09.04.2025 பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.







இந்நிகழ்வு காலை 9.30 முதல் பி.ப 5.00 மணி வரை இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட சிறு தொழில் முயற்சியாளர்கள் பல்வேறு உற்பத்தி பொருட்களை விற்பனை செய்தனர்.




இச் செயலமர்வின் வளவாளராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்கள் கலந்து கொண்டார்.மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.







மண்முனை வடக்கு பிரதேச செயலக ஸ்ரீ ராஜகணபதி ஆலய சங்காபிஷேக நிகழ்வானது 01.04.2025 அன்று சதுர்த்தி நன்னாளில் அலுவலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் ஒழுங்கமைப்பில் சிறப்பாக இடம்பெற்றது.












இந் நிகழ்வு மட்டக்களப்பு ஆனைப்பந்தி சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்திலிருந்து பிரதேச செயலக ராஜகணபதி ஆலயம் வரை உத்தியோகத்தர்களின் பாற்குட பவனியுடன் ஆரம்பமானது. விஜயசக்தியின் நடனாஞ்சலி, கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறி பாடசாலை மாணவியின் கதாப்பிரசங்கம், பஜனை போன்ற கலை நிகழ்வுகளால் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.அன்னதானத்துடன் உற்சவம் சிறப்பாக நிறைவுற்றது.










இந்நிகழ்வின் வளவாளராக மண்முனை தென் எருவில் பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.சத்யகௌரி தரணிதரன் அவர்களும் திருமதி.மிர்னாளினி பிரபாகரன் உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களும் கலந்து கொண்டார்.











