பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. சுபா சதாகரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.




இந்நிகழ்வில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி DR.E.உதயகுமார் மற்றும் சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கான அனுசரனையினை FPA மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வு காலை 9.00 மணி முதல் பி.ப 1.00 மணி வரை இடம்பெற்றது.இங்கு Eye Test,Physical Checkups,Blood Sugar,Urine Tests, PH Level & ProteinHemo globin,BP,BMI,ANC & PNC Care,Breast Cancer examination மேலும் பல சேவைகள் வழங்கப்பட்டன.




மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப்பட்டறை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டலில் 15.05.2025 பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடாத்தப்பட்டது.


இந்நிகழ்வின் வளவாளராக அம்பாறை மாவட்ட செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கு.ஜெயராஜ் அவர்கள் கலந்து கொண்டார்.இந் நிகழ்வை மண்முனை வடக்கு பிரதேச செயலகஉதவிப் பிரதேச செயலாளர் திருமதி.சுபா சுதாகரன், இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

இந் நிகழ்வில் அறநெறிக்கல்வியின் முக்கியத்துவம், அதனை மாணவர்களை ஈர்க்கக் கூடியவாறு செயற்படுத்தல், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் இடையூறுகள், தீர்க்கும் வழிவகைகள் என்பன ஆராயப்பட்டன. குறிப்பாக இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை செயற்படுத்துதல் தொடர்பாக விசேட அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டது.இந் நிகழ்வில் கலந்து கொண்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு அநெறி பாடநூல்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதேச செயலக மட்ட உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நெறியானது 17.04.2025 உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.பிரதேச செயலக மட்ட உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நெறியானது 17.04.2025 இன்று உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.



இந்நிகழ்வு காலை 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை இடம்பெற்றது.இந்நிகழ்வின் வளவாளர்களாக திரு.நிர்மலராஜ் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட செயலகம் மட்டக்களப்பு அவர்களும் திருமதி.சி.கொரேரா அபிவிருத்தி இணைப்பாளர் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் அவர்களும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்கள், திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக, வெளிக்கள உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.
அரச உத்தியோகத்தர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நெறியானது 29.04.2025 பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டலில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.சுபா சுதாகரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு காலை 9.00 மணி முதல் பி.ப 1.30 மணி வரை இடம்பெற்றது.இந்நிகழ்வின் வளவாளர்களாக திரு M.I.M அஜூன் மாவட்ட மத்தியஸ்த இணைப்பாளர் அவர்களும் திருமதி ஜீவிதா நதீசன் மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகம் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் இணைப்பாளராக மத்தியஸ்த அபிவிருத்திஉத்தியோகத்தர் திருமதி.பிறின்சி நிலோஜினி மண்முனை வடக்கு பிரதேச செயலகம் அவர்கள் செயற்பட்டார். இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.



மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடாத்தும் வர்த்தக கண்காட்சியும் விற்பனை சந்தையும் 11.04.2025 வெள்ளிக்கிழமை புளியந்தீவு தெற்கு வாவிக் கரை வீதி,வீரபத்திரர் ஆலயத்திற்கு முன்பாக மு.ப 9.00 முதல் பி.ப 4.00 மணி வரை இடம்பெற்றது. இந்நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.





பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் உத்தியோகத்தர்களின் ஒழுங்கு படுத்தலின் கீழ் கண்காட்சியும் விற்பனையும் முன்னெடுக்கப்பட்டது .கண்காட்சியில் சிறு தொழில் உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன .பெருமளவிலான வாடிக்கையாளர்கள் வருகைதந்து ஆர்வத்துடன் உள்ளூர் உற்பத்தி பொருட்களை ஆர்வத்துடன் கொள்வனவு செய்தனர்.











