



காத்தான்குடி பிரதேச செயலாளர் வெற்றி கிண்ணப்போட்டியில் எமது மண்முனை வடக்கு பிரதேச செயலக அணி முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளது.





அரச அதிகாரிகளுக்கிடையிலான தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டியில் D பிரிவு லீக்கில் மண்முனை வடக்கு பிரதேச செயலக வலைப்பந்தாட்ட அணி நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த ஒளிவிழா 2024.12.13 அன்று பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.




மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வணபிதா பிலிப் ரஞ்சன்குமார் , மற்றும் வணபிதா வினோத் சபாபதி பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

பிரதேச செயலக உத்தியோகத்தினரின் கரோல் கீதங்கள், நடன நிகழ்வு மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தினரின் சிறார்களின் நடன நிகழ்வு மற்றும் பாலன் யேசுவின் பிறப்பு பற்றிய குழு நாடகமும் அரங்கேற்றப்பட்டன.





எமது பிரதேச செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களான Mrs.Mable Hariharan(MSO - 1), Mr.T.Ravichandran (OES - 1) ஆகியோருக்கான கௌரவிப்பும் சேவை நலன் பாராட்டும் நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலக பதவியணியினர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் 18.11.2024 அன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.























