மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளராக கடமை புரிந்து மாற்றலாகி சென்ற திரு. அருணாசலம் சுதர்சன் அவர்களுக்கு 17.03.2023 அன்று பிரியாவிடை நிகழ்வு பிரதேச செயலக பதவியணியினர் நலன்புரிச்சங்கம் ஏற்பாட்டில் இடம்பெற்றது.


ddp1

ddp2

ddp3

ddp4

ddp5

ddp7

ddp8

ddp9

ddp10

 

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின்   ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு கல்லடி பேச்சியம்மன் ஆலய வளாகத்தில் 14.03.2023 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் "அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்"  எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

IMG 20230315 WA0153

IMG 20230315 WA0160


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவன பணிப்பாளர் கலாநிதி.திருமதி.புளோரன்ஸ் பாரதி கென்னடி அவர்கள் கௌரவ அதிதியாகவும் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. காமினி ஜூட் இன்பராஜா,கல்லடி ஆலய முகாமையாளர் திரு.நமசிவாயம் ஹரிதாஸ், பேச்சியம்மன் ஆலய தலைவர் திரு.பொன்னையா குணசீலன் ஆகியோரும் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

IMG 20230315 WA0157

IMG 20230315 WA0091

IMG 20230315 WA0026

மண்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரால் திறன் பட இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG 20230315 WA0156

IMG 20230315 WA0161

IMG 20230315 WA0079

சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் "Hungry Blast Programme" 27.02.2023 பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் திரு வ.வாசுதேவன் தலைமையில்  நடைபெற்றது.

இந்நிகழ்வானது மண்முனை வடக்கு சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு சுவையானதும் தரமானதுமான  உணவுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு தொழில் முயற்சியாளர்களினால் விற்பனை செய்யப்பட்டது.

இதில் பதவி நிலை உத்தியோகத்தர்கள்,ஏனைய உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்டு அங்குள்ள தொழில் முயற்சியாளர்களை  ஊக்குவித்தனர்.

1

2

3

IMG 20230227 WA0003

IMG 20230227 WA0004

IMG 20230227 WA0005

IMG 20230227 WA0010

 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ முகாம்  09.03.2023 அன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

im1

இதில் கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், நிர்வாக கிராம உத்தியோகத்தர் மற்றும் சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். 

2

3

மேலும் பெண்களுக்கான  உடல் ஆரோக்கியம் தொடர்பான பரிசோதனை மற்றும் ஆலோசனை வழிகாட்டல்கள் என்பன சுகாதார சேவை நிலைய வைத்தியர்கள், தாதியர் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது.

4

இதற்கு Family Planning Association of Sri Lanka என்ற நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.

5

6

சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வியாபார ஊக்குவிப்பு நிகழ்வு 16.02.2023 பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இது இலங்கை பூராகவும் உள்ள சகல பிரதேச செயலகங்களிலும் ஒரே நாளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
m1
 
இந்நிகழ்வில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களும் புதிதாக வியாபாரத்தை ஆரம்பிக்க இருக்கும் தொழில் முயற்சியாளர்களும் பங்கு பற்றினர்.
m2
இதன்போது வியாபாரத்தை ஊக்குவிக்கக்கூடிய சகல ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன் வியாபாரத்தின் பலம் பலவீனங்களும் விளக்கிக் கூறப்பட்டது.
m3
இதில் HNB வங்கியோடு தொழில் முயற்சியாளர்களை தொடர்புபடுத்தி அவர்களுக்கான கடன் வழங்கும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

News & Events

23
மே2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
மே2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

குடியுரிமை சாசனம்

Scroll To Top