கடந்த 2022ம் வருடத்துடன் எமது அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்று சென்ற உத்தியோகத்தர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா 30.12.2022 அன்று பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்றது.
1. Mrs .T. தேவதாஸ் - SDO
2. Mrs. P. பூபாலராஜா - SDO
3. Mr. S. தேவதாஸ் - OES
4. Mr. P. கலாதேவன் - SSO
5. Mr. M. பரிமலராசா - GN






மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 2023ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு 02.01.2023 காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து உத்தியோகத்தர்களும் அரச நிர்வாக சுற்றறிக்கைக்கமைவாக(30/2022) சேவை உறுதியுரையும் செய்துகொண்டனர்.

Manmunai North Divisional Secretariat won the 3rd Place in the National Productivity Competition 2020. The Award Ceremony was held on 15th December 2022 at Temple Trees Colombo.


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக 2022 ஒளி விழா நிகழ்வானது 16/12/2022 அன்று பிரதேச செயலக டேபா மண்டபத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் Rev.Fr.A.நவரெட்ணம், Rev.A.S.சுபேந்திரன் ஆகியோரது சிறப்புரை இடம்பெற்றது.
மேலும் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பரிசாக வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக பணியாற்றி 30.11.2022 உடன் ஓய்வு பெற்றுச்சென்ற திருமதி. கோமதி இந்திரகுமார் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 01.12.2022 பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.



























